Pages

வியாழன், 8 நவம்பர், 2012

ஃபேஸ்புக்-ல் நான் கண்ட கவிதைகள் சில……

ஃபேஸ்புக்-ல்  நான் கண்ட கவிதைகள் சில…….
முதியோர் இல்லங்கள்
கடுகடுவென கோபமுகம் காட்டும்
மகன் இல்லை,
முணுமுணுத்து முகம் சுழிக்கும்
மருமகள் இல்லை,
அடித்து கடித்து வம்பிழுக்கும்
பேரக்குழந்தைகளும் இல்லை
வேளை தவறா
உணவும் மருந்தும் கிடைத்தாலும்
இங்கு,
மனதில் நிம்மதியுமில்லை;
வேரற்ற வாழ்க்கையில்
உயிர்ப்பும் இல்லை
எனகென்ற பாதை..

வாழ்க்கைப் பாதையில்
நீண்ட பல பொழுதுகள்
வெற்றிருள் வெளியாய்
விரைந்து சென்றன...

எதிர்வரும் முகங்கள்
உறவுடன் சிரிக்கும்
உள்ளே ஏளனம்...
பேசியே சிரிக்கும்..!

கூட இருந்து
குழி தோண்டும் உறவுகள்...
கூடிக் கூடிக்
கண்டது என்ன??

இன்று வரைக்கும்
இருப்பைத் தொலைத்து ,
ஏக்கத் தீயுள்
வீழ்ந்தே கிடந்தேன்...

காலம் கடந்த
ஞானம் யார்க்கும்
கடுகளவேனும் உதவி செய்யாது..

எந்தன் பாதை
எந்தன் பயணம்...!
இடையில் எதற்கு
அடுத்தவர் சேர்க்கை...

இதுவரை கடந்த
இருள்வழி போதும் ...
எனக்கென என்வழி
இனிதே நடப்பேன்...

- கவின்மகள்
கொடை வள்ளல்

இரவின் மழையில்
நாய்க்குட்டி,
குடை கோடுக்க கொடை வள்ளல்கள்
யாரும் இல்லை,
வருத்தத்தில் வீட்டில்
அமைதியாய் நான்…………..
ஆரம்பம்

சந்தோசத்தின் பூக்கள்
கண்ணீர் மழையினாலே
பூக்கிறது
வானத்தின் விடியல்
இருளில் இருந்தே
விடிகிறது
புதிய கண்டுபிடிப்புகள்
அறியாமை கேள்வியிலிருந்தே
ஆரம்பிக்கிறது
உலகின் நாகரிகம்
மனித தவறுகளிலிருந்தே
பெறப்படுகிறது
வாழ்க்கையின் அனுபவங்கள்
பல வலிகளின் மூலமே
கிடைக்கிறது
நதியின் ஆரம்பம்
மலையிலிருந்து பிரியும்போதே
தொடர்கிறது
தீச்சுடரின் ஆரம்பம்
தீக்குச்சியின் மரணத்திற்குப்பிறகே
பிறக்கிறது
நீயென்ன
மகரந்தத் தூள்களின்
சேமிப்புக் கிடங்கா?

மயக்கும் மணம்
மனம் மயக்கும்.

மறந்து போனேன்
உன்னிடம் ஒரு சேதி சொல்ல
ஒரு கூட்ட மயில்கள்
உன் வீட்டு விலாசம் கேட்டு
என்வீட்டு கதவைத்தட்டியது
அவைகளுக்கு நடனம்
படிக்க ஆசையாம்.

செம்பருத்திப் பூவிடம்
கேட்டுப்பார்த்தேன்
நீ கொடுத்த முத்தத்தில்.
சிவந்து போனதாம்.

சுசீந்திரன்
மதுகவிதை


என்ன எழுதினேன் ஞாபகமில்லை
எல்லோரும் கவிதை என்றார்கள் .
என்னபேசினேன்ஞாபகமில்லை
எல்லோரும்பாட்டு என்றார்கள் .

உனக்கு காரம் பிடிக்கும்
எனக்கு இனிப்பு பிடிக்கும்
நம்மை தெரிந்த அவனுக்கு
இரண்டு சுவையும் பிடிக்கும்

மச்சங்களை துண்டாக்கி
மசாலாவில் வைத்துள்ளாய்
வெள்ளரிப் பிஞ்சுகள்
கைமுழுக்க கொண்டுள்ளாய்
நீர் தேடி அலைவதென்ன
மச்சம் இன்னும்
பச்சையாய் இருப்பதென்ன
பகுத்துப் போட்டு
வகுத்து வெல்
எரித்துப் போட்டு
சிரித்துக் கொல்.
கருனைக்கொலையாய்
கணக்கில் கொள்.

மாரிக்கு மதுபானம் பிடிக்கும்
கோபிக்கு குமரிகள் பிடிக்கும்
பாரிக்கு படம்பார்க்க பிடிக்கும்
பாலனுக்கு படுகொலை பிடிக்கும்

கணவாய் வழிவந்து
கடந்து பார் சமவெளி
அடைவாய் வட்டக்குளம்
வட்டக் குளம் வீழ்ந்தெழுந்து
காத தூரம் நடந்து போ
இருமலைகள் காண்பாய்
இருமலைகள் இடையே
இருக்குதொரு செங்கண் வாய்
அங்கே நீ பள்ளிகொள்வாய்.

சுசீந்திரன்
படை நடுங்கா
கருநாகப் பாம்படி
உன் கறுத்துத்
திரண்ட கூந்தல்
பள்ளி கொள்ளும்
பரந்தாமன் யாரடி
தொட்டுத்தொட்டு
விளையாடுது தென்றல்

சுசீந்திரன்
சொல்லாத வார்த்தைகள்.

மேகம் சூழ்ந்த மாலைநேரத்தில்
பிரிந்து விடலாம் என்று
நீ சொன்ன வார்த்தைகளைவிட
சொல்லாத வார்த்தைகளையே
தேடித் தவிக்கிறது மனம்
தினம் தினம்.

-மு.ஆனந்தி.
பிணைந்து தின்ன
சோறின்றி,
குப்பையில்
மொய்க்கும்,
இலையை நக்கி,
போக்கிய பசி,

வறுமையின் சிகரமாய்
நம் நாட்டில்,
அன்றுப்போல் இன்றும்,
என்றுமோ?

வறுமை ஒழிப்பு
தினமாம் இன்று!

வற்றாத ஆற்றை
கண்டவர் யாரோ,
ஒழியாத வறுமையை
கொண்டாடுபவர் யவறோ?


எழுத்தோலை, கோ.இராம்குமார்.
-நன்றி

 குறிப்பு :  கருத்துரைகளை எழுத மறக்க வேண்டாம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக