Pages

வெள்ளி, 28 டிசம்பர், 2012

காதலி தத்துவங்கள்







1.
காதல்ல காசு இருந்தாதான் கோட்டா,
இல்லாட்டி உனக்கு டாட்டா....


2.
திரிஷா இல்லனா திவ்யா
கார்த்தி இல்லனா மூர்த்தி(டோண்ட் வொர்ரி கேர்ள்ஸ்)

3.
காதலிய கவுக்க நீ
எழுதுவ கவித,
காதலி உன்ன கவுக்க கட்டுவா புடவ!!!

4.
வெங்காயத்த நீ அறிஞ்சா கண்ணீரு
காதலிக்க தெரிஞ்சா தெளிக்கலாம் பன்னீரு..

5..
காதலி கைவிட்டா பைத்தியம்,
காதலியே இல்லனா நீ புன்னியம்


6.
காதல காதலிக்கனும்னா
உன் காதலி
அழகா அமைஞ்சிருக்கனும்.

7.
நிசமா காதலிச்சா நீ ரொம்ப பழசு,
டைம்பாஸ்க்கு கதலிச்சாத்தான் நீ இளசு.!!!


8.
காதல்ல விழுந்துட்டா நீ அப்பாவி
அப்ரம் அவளேதான் உனக்கு சாவி.!!!

9.
காதல் வேற, கல்யாணம் வேற
--------
புது ரூல்ஸ்-----------

கடைசியா:--
10.
எப்பவும் பொய் சொல்ற கவித பிடிக்கும்,
எப்பவாச்சும் பொய் சொல்ற என்ன பிடிக்கலையே உனக்கு.!!!


புதன், 12 டிசம்பர், 2012

HTML – பயிற்சி 1



HTML நீங்கள் உங்கள் சொந்த வலை தளம் உருவாக்க முடியும்.
இந்த பயிற்சி HTML பற்றி எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும்.
HTML கற்றுக்கொள்ள எளிது - நீங்கள் அனுபவியுங்கள்.

Notepad அல்லது TextEdit பயன்படுத்தி எழுதி HTML

  • அடோப் ட்ரீம்வீவர்
  • மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பிரஷன் வெப்
  • CoffeeCup HTML எடிட்டர்
எனினும், HTML கற்றல் நாம் நோட்பேடை (பிசி) அல்லது TextEdit (மேக்) போன்ற ஒரு உரை ஆசிரியர் பரிந்துரைக்கிறோம். நாம் ஒரு எளிய உரை தொகுப்பியை பயன்படுத்தி HTML அறிய ஒரு நல்ல வழி என்று.
Notepad உங்கள் முதல் வலைப்பக்கத்தில் உருவாக்க கீழே 4 பின்பற்றவும்.

படி 1: தொடக்க நோட்பேடை

Notepad சென்று தொடங்க:
துவக்க 
   
அனைத்து நிரல்கள் 
       
அசெஸரிஸ் 
           
நோட்பேடை

படி 2: Notepad உங்கள் HTML திருத்து

உங்கள் Notepad உங்கள் HTML குறியீட்டை தட்டச்சு:
Description: எதாவது

படி 3: உங்கள் HTML சேமி

தேர்வு என .. சேமி Notepad கோப்பு மெனுவில்.
நீங்கள் ஒரு HTML கோப்பை சேமிக்கும் போது, நீங்கள். Htm அல்லது. Html கோப்பை நீட்டிப்பு அல்லது பயன்படுத்த முடியும். எந்த வித்தியாசமும் இல்லை, அதை நீங்கள் முழுவதும்.
இப்படி, நினைவில் எளிதானது என்று ஒரு கோப்புறையில் கோப்பு சேமிக்க டபிள்யு 3 ஸ்கூல்ஸில்.

படி 4: உங்கள் உலாவியில் HTML இயக்கவும்

உங்கள் இணைய உலாவி தொடங்க மற்றும் உங்கள் html கோப்பை திறக்க கோப்பு , திறந்த மெனு, அல்லது கோப்புறையை உலவ உங்கள் HTML கோப்பை இரட்டை கிளிக்.
இதன் விளைவாக, இந்த இருக்க வேண்டும்:
Description: உலாவியில் காண்க



வெள்ளி, 7 டிசம்பர், 2012

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?



அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ர
ோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்...








நன்றி
            -சேது

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்



*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

வியாழன், 6 டிசம்பர், 2012

சில பொது அறிவுத் தகவல்கள்....


பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.


பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.








நன்றி


           -
சேது

Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.



வெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட Smartphone- களை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவல்கள் என்ன? 

ஏன் Smartphone ?

உங்களுடைய செயல்கள் அனைத்தையும் Smart ஆக செய்ய உதவுகிறது இது. எந்த ஒரு செயலுக்கும் தனித் தனியாக Application என்று கணினி போல இருப்பதால் மிக எளிதாக உங்கள் வேலை முடிந்து
விடும். Smartphone- இல் பெரும்பாலான பயன்பாடுகள் இணையம் சார்ந்தே இருக்கும். உங்கள் தினசரி வேலையில் இருந்து, உங்கள் தொழில் வரை அனைத்துக்கும் உதவும் வகையில் செயல்படுகின்றன. எங்கே இருந்து வேண்டுமானாலும், நீங்கள் நினைத்த வேலையை செய்து முடித்திடலாம்.

விலை (Price) :

எல்லோருக்கும் முதலில் இதை சொல்லி விடுவது உத்தமமாய் இருக்கும். முதலில் நீங்கள் எவ்வளவிற்கு வாங்க போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதன் பின் கீழே உள்ளவற்றை பொறுத்து உங்கள் பணத்திற்கு ஏற்ப ஒரு அலைபேசி வாங்கி விடலாம்.

இயங்கு தளம் (Operating System) :

எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஒரு இயங்கு தளத்தில் (OS) தான் இயங்கும். இதில் பிரபலமானவை iOS, Android, Windows, Blackberry, Symbian. இதில் iOS என்பது ஆப்பிள் நிறுவன அலைபேசிகளில் மட்டும், Blackberry என்பது Blackberry நிறுவன அலைபேசிகளில் மட்டும், Symbian என்பது நோக்கியா அலைபேசிகளில் மட்டுமே.

இதில் ஆப்பிள் விலை பற்றி சொல்லவே வேண்டாம், கொஞ்சம் அதிகம் பணம் உள்ளவர்கள் தான் வாங்க முடியும் என்ற போதும் இதன் மிகப் பெரிய பலன் Upgrade வசதி. நீங்கள் எப்போது வாங்கி இருந்தாலும், புதிய Version OS வெளியாகும் போது அதற்கு Upgrade வசதி தரப்படுகிறது. இதனால் புதிய வசதிகளை எளிதாக பெற முடியும்.

அதே போல தான் Blackberry, ஆப்பிளை விட விலை குறைவு என்ற போதிலும், இதன் கட்டமைப்பு, பயனர் இடைமுகப்பு (User Interface) போன்றவை எல்லாரும் பயன்படுத்த உகந்ததாக இல்லை என்பது ஒரு குறை. இது Business சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப் பொருத்தமான அலைபேசி. இதிலும் Upgrade வசதி வழங்கப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டு வரை Smartphone உலகின் ராஜாவாக இருந்த Symbian, அதன் பின்னர் Android வளர்ச்சியால் அடிவாங்க ஆரம்பித்து, இன்று அடியோடு நின்றுவிட்டது. இதை வாங்குவதை தவிர்ப்பது நலம்.

அடுத்த நிறைய பேரின் வேட்கையான ஆன்ட்ராய்ட் (Android), அதிகமான மக்களின் ஸ்மார்ட்போன் கனவை நனவாக்கியது இது தான். விலை குறைவு, அதிக வசதிகள், பெரும்பாலும் இலவசம் என்ற அதிரடிகளுடன் மிகப் பெரிய மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து வருவதால் கூகுளின் இந்த பிள்ளை நன்றாகவே வளர்கிறது. இதில் ஒரு பிரச்சினை குறிப்பிட்ட மாடல் அலைபேசி ஒன்றை நீங்கள் வாங்கும் போது Upgrade என்பது எல்லா முறையும் கிடைக்காது. உதாரணமாக 2.3 OS வந்த போது வாங்கியவர்கள் பெரும்பாலும் 4.1 OS வரை Upgrade செய்ய வாய்ப்பு பெற்றார்கள். ஆனால் அதற்கு பிறகு கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இந்த கேள்விக்குறி கூட இல்லாமல் 2.3 OS - யில் நின்று விட்டவர்கள் பலர். ஆனால் Upgrade எல்லாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2.3 OS இருந்தால் ஒரு ஆன்ட்ராய்ட் போனை கண்டிப்பாக வாங்கலாம். அதற்கு கீழ் போக வேண்டாம்.

அடுத்து Windows OS. நம் கணினியில் இயங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான இது போன் மாடல்களினால் தடுமாறி வருகிறது. இயங்கு தளத்தில் பிரச்சினை இல்லை என்ற போதும் Phone Specification இதை வாங்க வேண்டுமா என்று உங்களை யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ஆனால் மிக எளிதான Interface, செயல்பாடை விரும்புபவர்கள் இதை வாங்கலாம். குறைந்தபட்சம் 7.5 தெரிவு செய்யவும்.

வடிவமைப்பு, டிஸ்ப்ளே (Body, Display):

ஒரு போன் வாங்கும் அது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை Body என்பதன் கீழ் வரும். இதில் நீங்கள் குறிப்பாக கவனிக்க வேண்டியது. எடை. பெரும்பாலும் எடை குறைவாக இருக்கும்படி பார்க்கவும்.

Display

அடுத்து Display, இது மிக முக்கியமான ஒன்று. எப்படியும் Touch Screen போன் தான் வாங்க போகிறீர்கள். அப்படி என்றால் அது என்ன வகை என்று நீங்கள் பார்க்க வேண்டும். Resistive, Capacitive என்ற இரண்டு வகை உள்ளன. இதில் நீங்கள் சமரசமே இல்லாமல் தெரிவு செய்ய வேண்டியது Capacitive Touch Screen. தப்பித் தவறி Resistive வாங்கி விட்டால், இங்க் ரப்பர் பயன்படுத்துவது போலத்தான், போனை போட்டு தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றபடி Capacitive தெரிவு செய்யும் நீங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ப TFT, AMOLED மற்றும் பல Features கிடைக்கும். அதோடு நீங்கள் வாங்கும் போன் MultiTouch Support செய்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள், குறைந்த பட்சம் இரண்டு விரல்கள் கட்டாயம் தேவை. விளையாட்டு ரசிகர்களுக்கு இது அவசியம்.

Display Size என்பது உங்கள் விருப்பம். ஆண் என்றால் 4 இஞ்ச்க்கு மேல் வாங்கினால் எங்கே வைக்க போகிறீர்கள் என்று யோசித்து வாங்க வேண்டும். ஏன் என்றால் சில நேரங்களில் பெரிதாக வாங்கி விட்டால் பிறகு உங்கள் போனுக்கு தனியாக அளவெடுத்து பாக்கெட் தைக்க வேண்டி வரலாம். பெண்களுக்கு பிரச்சினை இல்லை. iPad போல 10 இஞ்ச் என்றாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். :-)

நினைவகம் (Memory) :

அடுத்து மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. Smartphone - கள் கணினி போலவே RAM, Internal Memory போன்றவற்றோடு வருகின்றன. எனவே உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்க வேண்டும். RAM 512MB குறைந்த பட்சம் இருந்தால் நலம், அதே போல Internal Memory குறைந்த பட்சம் 150 - 200 MB அவசியம்.

External Memory பெரும்பாலும் MicroSD Card Support செய்வதாக வந்து விட்டது. அது 32GB வரை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

கேமரா (Camera):

பெரும்பாலும் எந்த Phone வாங்கும் போதும் கவனிக்க வேண்டிய விஷயம் இது. எத்தனை மெகா பிக்ஸல் கேமரா என்று முடிவு செய்து கொண்டு வாங்க வேண்டும். அதோடு உங்களுக்கு Flash முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இரவில் படம் எடுக்கும் போது உங்களுக்கு சிரமம்.

Video Recording என்பதையும் இதில் கவனிக்க வேண்டும். 5MP Camera என்றாலே 720p(தரமான வீடியோ) அளவுக்கு Video Recording வசதி வந்துவிட்டது. 5MP வாங்கி விட்டு VGA Recording(தரம் குறைவான வீடியோ) செய்து கொண்டிருந்தால் வீண்தான்.

வீடியோ Calling வசதி வேண்டும் என்பவர்கள் சிரமப்படாமல் இருக்க Front Camera இருக்கும் போன் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள்.

ப்ராசஸர் (Processor):

மிக மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. உங்கள் போனுக்கு இதயம் போன்ற பகுதி இது தான். இதில் நான் Chip-set, GPU என்றெல்லாம் குழப்ப விரும்பவில்லை. குறைந்த பட்சம் 800Mhz இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

பாட்டரி (Battery) :

எல்லாமே சரி. பாட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பது தான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். இதில் Smartphoneகளுக்கு 1100 போல பத்து நாள் சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பாட்டரி லித்தியம் அயான்(Li-Ion) ஆக இருக்க வேண்டும், அதுவும் குறைந்த பட்சம் 1500 mAh தெரிவு செய்தால் தான் ஒரு நாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும் (உங்கள் பயன்பாடுகளை பொறுத்து).

இணையம் & இணைப்புத்தன்மை (Internet & Connectivity):

நீங்கள் வாங்கும் மொபைல் 3G enabled Phone தானா என்று உறுதி செய்து கொள்வது அவசியம். அதே போல Bluetooth, Wi-Fi, GPS, USB வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். Bluetooth Version குறைந்த பட்சம் 2.1+ EDR ஆக இருத்தல் நலம்.

ப்ரௌசெர் HTML வசதியுடன் வரும், அதே சமயம் Flash இருந்தால் இன்னும் சிறப்பு.

இவையே ஒரு Smartphone வாங்கும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள்.

நிரந்தரமாக அழிக்கப்பட்ட Files ஐ மீளப்பெற உதவும் தரமான Top 4 Recovery Softwares



இணையத்தில் எத்தனையோ Data Recovery Applications உள்ளன . ஆனால் இந்த நான்கு மென்பொருட்களின் சிறப்பான அம்சம் என்ன தெரியுமா ? நீங்க உங்கள் Hard Disc முழுதாக Format பண்ணினாலும் , Format பண்ண முதல் என்னென்ன Files அழித்தீர்களோ அனைத்தையும் மீள பெறமுடியும்.

இணையத்தின் முண்ணனி தரவரிசை இணையத்தளமான TopTenReviews.Com இன் Recovery Software களுக்கான Top Ten Rating இல் இவைதான் முதல் நான்கு இடத்திலும் உள்ளன.

ஆதாரம்http://data-recovery-software-review.toptenreviews.com/

தரவிறக்க Links அனைத்தையும் நான் பரிசோதித்து தரவிறக்கி பார்த்தபின்பே உங்களுக்கு தரப்பட்டுள்ளது. No Virus , Malware Detected. 100% Safe.
.
.
.
.

1 DT Digital Rescue

http://rapidshare.com/files/313925261/Rescue.www.joeschatterbox.co.uk.rar

2 Recover My Files Pro

http://hotfile.com/dl/26555434/b8d505e/Recover_My_Files_4.4.8.575.rar.html

3 Data Recovery Wizard pro 4.3.0

http://hotfile.com/dl/10957923/4d88d1f/DataRecovery-WizardPro4.3.rar.html

4 Dead Disk Doctor Pro 1.2.6

http://hotfile.com/dl/9083770/54bac31/Dead__Disk_Doctor_1.26.rar.html

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!



தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று
நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்றுத் தேடல் தொடரும்..!

Sources:
----------
32,000 year old underwater city found - Dwarka:
http://www.youtube.com/watch?v=Qgtk1mxgWDU&feature=related


Lemuria (continent):
http://en.wikipedia.org/wiki/Lemuria_%28continent%29




ஞாயிறு, 2 டிசம்பர், 2012

பொது அறிவு Q&A



சென்னையில இருந்து லண்டனுக்கு
எவ்வளோ தூரம்..?
** ரொம்ப தூரம்........,

* முட்டை போடாத பறவை எது..?
** ஆண் பறவை.

* ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?
** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை..

* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?
** Mrs.பில் கேட்ஸ்

* வருஷத்துல எந்த மாசத்துல
28 நாள் இருக்கு..?
** எல்லா மாசத்துலயும் தான்..

* 1984-ல நம்ம Prime Minister பெயர்என்ன.?
** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )

* இந்தியாவுக்கும் ­., இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?
** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்.,
ஆனா..,
இலங்கை Map-ல இந்தியா இருக்காது..

* ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?
** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு ­ இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!











that`s all over.....................................
நன்றி