Pages

சனி, 27 அக்டோபர், 2012

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

  நிறைய பெண்களுக்கு இதெல்லாம் தெரியாம இருக்கலாம், தெரிந்த சிலர் மட்டும்தான் இதையெல்லாம் உபயோக்கின்றனர். எனவே நாட்டிற்கும், வீட்டிற்கும் உபயோகப்படும்வகையில் அனைத்து ஆண்களையும் பிடித்து ஜெயிலில் போட இதோ வழிகள். பிடிங்க சார் அவனை பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.! 


  • "என்னை கனவில ராக்கிங் பண்ணினான்"னு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கேஸ் போடலாம்.

  • "என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணினான்"னு கேஸ் போடலாம். நான் ஒயிட்டா இருக்கும்போது இவன் எப்படி என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணலாம்னு கேட்கலாம்

  • புது நம்பர்ல அவன் போனுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு திருப்பி அவன் கூப்பிட்டா "எனக்கு அடிக்கடி கால் பண்ணுறான்"னு கேஸ் போடலாம். நீங்க பண்ற மிஸ்டு கால் ரெகார்ட் ஆகாது ஆனா அவன் கூப்பிட்டா ரெகார்ட் பண்ணிக்கலாமே?

  • "பேசாம இருக்கிறான்"னு கேஸ் போடலாம். நான் எவ்வளவு பேசியும், ட்விட்டர் FBல மென்சன் பண்ணியும் அவன் பேசவே இல்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலும் வேதனையும் அடைந்தேன்னு கேஸ் போடலாம்.

4 வருசத்திற்கு முன்னாடி என்கூட சண்டை போட்டான்னு கேஸ் போடலாம். சண்டையின்போது மிகவும் வக்கிரமமா, ஆபாசமா என்னைப் பார்த்து "ஹா ஹா"என்று சிரித்தான். எனவே இந்த மனிதத்தன்மையற்ற செயலைக்கண்டித்து ஆபாச தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கலாம்



  • "இன்னிக்கி கருப்பு கலர் பான்ட் போட்டிருக்கான்னு கேஸ் போடலாம்" - இன்று நான் கருப்பு சுடிதார் போட்டுக்கொண்டு வருவது இவனுக்கு எப்படி தெரியும்? எங்கோ ஆள் வைத்து உளவு பார்க்கிறான், அப்படித்தான் இவனும் கருப்பு பான்ட் போட்டுக்கொண்டு வந்திருக்கான், எனவே அவனையும் உளவு பார்க்கிற இன்னொருவனையும் பிடிங்க அங்கிள்! பிடிச்சு ஜெயில்ல போடுங்க அங்கிள்!

  • "Log off. See you tomorrow" என்று அவன் FB Status update பண்ணினால் அதற்காகவும் பிடித்து ஜெயிலில் போட வழியிருக்கிறது. நாளை சந்திப்போம் என என்னைத்தான் சொல்கிறான் என்று கேஸ் போடலாம், கூடவே பந்தோபஸ்துக்கும் போலீஸை இலவசமாக வைத்துக்கொள்ளலாம்.

  • மேலுள்ளவற்றை எல்லாம் வைத்து பெண்கள் கேஸ் போட்டால் அதை ஆதரிக்க 1000 அடிவருடிகளாவது இருப்பார்கள். பெண் மைக் எடுப்பதற்கு முன்பாகவே "ஆஹா சூப்பர்" கோசமிடுவார்கள். அந்த பெண்ணால் பேச முடியாமல் போனால் "சூப்பர், காய்ச்சலிலும் பேச முயற்சித்ததற்கு ஒ!" என்று பாராட்டு கோசமிடுவார்கள். எனவே ஆதரவைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

  • அதே போல் போலீஸைப் பற்றியும் கவலைவேண்டாம். நீங்கள் காவல் நிலையத்திற்கு போகும்போதே திபுதிபு என ஓடிவந்து "யாரை மேடம் உள்ளே போடணும்?" என்று கேட்டு உங்களையே அசர வைப்பர். "சார் நான் பாஸ்போர்ட் சம்பந்தமா வந்திருக்கேன்" என்றால்கூட, "ஓகே மேடம் - ஒரு பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்ததற்காக ஒருவனை உள்ளே போடுவது ஃப்ரீ. சொல்லுங்க யாரை உள்ளே போட? "நீங்க அப்படியே ஷாக் ஆகிடுவீங்க."(விலங்குகளைக் காப்பாற்றக்கூட ப்ளூ கிராஸ் இருக்கு ஆனா ஆண்களைக் காப்பாற்ற ஒரு கிராஸும் இல்லே. ஆகையால் ஆண்களைக் காப்பாற்ற நாம ஏன் ஒரு ஒயிட் கிராஸ் ஆரம்பிக்கக்கூடாது?)
 -உங்கள் சேது....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக